- Google Pay
ஆப்ஸைத் திறக்கவும்.
- "பணத்தை நிர்வகித்தல்" என்பதற்குக் கீழ் பணப் பரிமாற்றப் பதிவைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- இங்கே, விரிவான பணப் பரிமாற்ற பக்கத்தைப் பார்க்க எந்தப் பணப் பரிமாற்றத்தையும் நீங்கள் கிளிக் செய்யலாம்.
உங்கள் முந்தைய பரிவர்த்தனைப் பதிவுகளைப் பார்ப்பது தொடர்பான பிழையறிந்து திருத்துதல்
Google Pay மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே உங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளில் இருக்கும். UPI/பேங்க் மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் எதுவும் அதில் இருக்காது. Google Pay பரிவர்த்தனைப் பதிவுகளைப் பார்க்க முடியவில்லை எனில் கீழுள்ள படிகளைப் பின்பற்றவும்.
படி 1: Google Pay ஆப்ஸைப் புதுப்பிக்கவும்
புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க Play Store அல்லது App Storeருக்குச் செல்லவும்.
படி 2: Google Payக்கான மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்கவும்
உங்கள் Google Pay கணக்கிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவுசெய்திருந்தால், மின்னஞ்சல் முகவரியைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளை மீண்டும் பின்பற்றவும்.
- Google Pay
ஆப்ஸைத் திறக்கவும்.
- உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- ஆப்ஸ் சார்ந்த அனுமதிகள் அனைத்தையும் வழங்க அனுமதி என்பதைத் தட்டவும்.
- உங்கள் மொபைல் சாதனத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள Google கணக்கை டைப் செய்து தொடர்க என்பதைத் தட்டவும். உதவிக்குறிப்பு: புதிய Google கணக்கையும் நீங்கள் சேர்க்கலாம்.
- உங்கள் Google Pay ஆப்ஸை
பாதுகாக்க, திரைப் பூட்டைப் பயன்படுத்து அல்லது Google பின்னைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்பு: திரைப் பூட்டு விருப்பத்தில் நீங்கள் பேட்டர்ன் பூட்டு, கைரேகை சென்சார், கடவுக்குறியீடு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். - பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்க்கவும்.
ஒரேயொரு மின்னஞ்சல் முகவரியை மட்டும் பயன்படுத்தி நீங்கள் Google Pay கணக்கைப் பதிவுசெய்திருந்தால், 3-4 மணிநேரத்திற்குப் பிறகு உங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளை மீண்டும் பார்க்க முயலவும். அதைப் பார்க்க முடியவில்லை எனில், அதற்கு மோசமான மொபைல் சிக்னலோ நெட்வொர்க் கவரேஜோ காரணமாக இருக்கக்கூடும்.
ஒரு தொடர்பின் பரிவர்த்தனைப் பதிவுகளைப் பார்த்தல்
- உங்கள் மொபைலில் Google Pay
ஆப்ஸைத் திறக்கவும்.
- உங்கள் தொடர்புகளைக் கண்டறிய மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
- ஒரு தொடர்பின் பணப் பரிமாற்றங்களையும் உரையாடல்களையும் பார்க்க அந்தத் தொடர்பைத் தட்டவும்.
பல Google Pay கணக்குகளுக்கான பரிவர்த்தனைப் பதிவுகளை ஒன்றிணைத்தல்
இந்த அம்சம் தற்போது இல்லை. ஆப்ஸில் கருத்து தெரிவிக்கும் விருப்பம் மூலம் இந்தப் பரிந்துரையை நீங்கள் பகிரலாம்.
பரிவர்த்தனைப் பதிவுகளில் ஃபில்டர்களைப் பயன்படுத்துவதற்கான வழிமுறை
குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளைக் கண்டறிய பரிவர்த்தனைப் பதிவுகளில் ஃபில்டர்களைப் பயன்படுத்துங்கள்.
- Google Pay ஆப்ஸை
திறக்கவும்.
- "பரிவர்த்தனைப் பதிவுகளைப் பாருங்கள்" பிரிவைக் கண்டறிய ஸ்க்ரோல் செய்யவும்.
- பரிவர்த்தனைப் பதிவுகளைப் பாருங்கள் என்பதைத் தட்டவும்.
- இந்த ஃபில்டர்களில் தேவையான ஃபில்டர்களைப் பயன்படுத்தவும்:
- நிலை: நிறைவடைந்த, தோல்வியடைந்த அல்லது செயலாக்கப்படும் பரிவர்த்தனைகளைக் கண்டறிவதற்கு.
- பேமெண்ட் முறை: பேமெண்ட் மூலத்தைத் தேர்வுசெய்யவும்.
- பேங்க் அக்கவுண்ட்
- UPI Lite
- தேதி: கால அளவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இந்த மாதம்
- கடந்த 30 நாட்கள்
- கடந்த 90 நாட்கள்
- தொகை: குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சத் தொகையை அமைக்கவும்.
- பேமெண்ட் வகை: கேஷ்பேக், பெறப்பட்ட பணம் அல்லது சுய பரிவர்த்தனை மூலம் ஃபில்டர் செய்யவும்.
குறிப்பிட்ட காலகட்டத்திற்கான பரிவர்த்தனைப் பதிவுகளைப் பார்த்தல்
"தேதி" ஃபில்டர் மூலம் வெவ்வேறு கால அளவுகளுக்கான உங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளைக் கண்டறியலாம்.
- Google Pay ஆப்ஸை
திறக்கவும்.
- "பரிவர்த்தனைப் பதிவுகளைப் பாருங்கள்" பிரிவைக் கண்டறிய ஸ்க்ரோல் செய்யவும்.
- பரிவர்த்தனைப் பதிவுகளைப் பாருங்கள் என்பதைத் தட்டவும்.
- தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
- கீழ் தோன்றுதல் ஐகானில் இருந்து கால அளவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இந்த மாதம்
- கடந்த 30 நாட்கள்
- கடந்த 90 நாட்கள்
- பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
Google Pay பரிவர்த்தனைப் பதிவுகளின் PDF/மின்னணு ஸ்டேட்மெண்ட்டைப் பெறுதல்
இப்போது இந்த அம்சம் கிடைக்காததால் உங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளின் PDF/மின்னணு ஸ்டேட்மெண்ட்டைப் பதிவிறக்க முடியாது. உங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை பற்றிய விவரங்களைப் பகிர, பரிவர்த்தனை விவரங்கள் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பகிர் பட்டனைக் கிளிக் செய்யவும்.
Google Pay பரிவர்த்தனைப் பதிவுகளில் அறியப்படாத தொகை காட்டப்படுதல்
Google Pay ஆப்ஸின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள். ஒவ்வொரு மாதமும் உங்கள் மொத்தச் செலவுகளிலிருந்து நீங்கள் பெறும் மொத்தத் தொகையைக் கழிக்கும்போது கிடைக்கும் தொகையை உங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளில் காட்டும் வகையில் புதிய அம்சம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
பணப் பரிமாற்றம் தொடர்பான சிக்கலைப் புகாரளித்தல்
உங்கள் பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டும் அதைப் பெறுநர் இன்னும் பெறவில்லை எனில், பணப் பரிமாற்றம் தொடர்பான சிக்கலை பேங்க்கிற்குப் புகாரளிக்கலாம்.
- புகாரளிக்க வேண்டிய பரிவர்த்தனையைத் திறக்கவும்.
- சிக்கல்கள் உள்ளன என்பதைத் தட்டவும்.
- சிக்கல் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
இன்னும் சிக்கல்கள் இருந்தால் Google Pay உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.
பரிவர்த்தனைப் பதிவுகளை நீக்குதல்
Google Pay ஆப்ஸில் உங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளை நீக்கினாலும், அந்தத் தகவல்கள் Googleளின் பதிவுகளிலிருந்து முழுமையாக அழிக்கப்படாது. சட்டப்பூர்வத் தேவைகள் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய பர்ச்சேஸ்கள், பணப் பரிமாற்றங்கள், திரும்பப்பெற்ற தொகைகள் போன்ற பணப் பரிமாற்றத் தரவை Google தக்கவைத்துக்கொள்ளும். நீக்கப்பட்ட பணப் பரிமாற்றத்தை தொடர்புடைய பணப் பரிமாற்றத்தில் உள்ள மற்றொரு தரப்பினரால் (எ.கா. வணிகர்/பயனாளி) அவரது ஆப்ஸின் “பரிவர்த்தனைப் பதிவுகள்” பக்கத்தில் பார்க்க முடியும்.
Androidல் உங்கள் Google Pay பரிவர்த்தனைப் பதிவுகளை நீக்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
- உங்கள் மொபைல் சாதனத்தில் Google Pay ஆப்ஸை
திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
- அமைப்புகள்
தனியுரிமையும் பாதுகாப்பும்
தரவு மற்றும் பிரத்தியேகமாக்கம் என்பதைத் தட்டவும்.
- Google கணக்கு என்பதைத் தட்டவும்.
- உங்கள் Google Pay பணப் பரிமாற்றங்களைப் பார்க்க எனது செயல்பாடுகள் என்பதில் உள்நுழையவும்.
- ஒரு பணப் பரிமாற்றத்தை நீக்க நீங்கள் இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
- நீக்கு என்பதைத் தட்டவும்.
- நீக்குதலை உறுதிப்படுத்தவும்.
- செயல்பாட்டை நீக்கு என்பதைத் தட்டவும்.
- கால இடைவெளியின் அடிப்படையில் செயல்பாட்டை நீக்கலாம்:
- கடந்த ஒரு மணிநேரம்
- கடந்த நாள்
- அனைத்தும்
- பிரத்தியேக வரம்பு
- கால இடைவெளியின் அடிப்படையில் செயல்பாட்டை நீக்கலாம்:
- நீக்கு என்பதைத் தட்டவும்.
- நீக்கிய பிறகு மாற்றங்களைப் பார்க்க:
- Google கணக்கிலிருந்து வெளியேறவும்.
- Google கணக்கில் மீண்டும் உள்நுழையவும்.
- Google Pay ஆப்ஸில்
உங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளைப் பார்க்கவும்.
உதவிக்குறிப்பு: Google Pay ஆப்ஸில் உங்கள் பரிவர்த்தனைப் பதிவுகளை நீக்க 12 மணிநேரம் வரை ஆகலாம்.