வணிகப் பணப் பரிமாற்றங்களை ஏற்றுக்கொள்ள Google Pay ஆப்ஸைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு உங்களிடம் தனிநபர் நடப்புக் கணக்கு இருக்க வேண்டும். இந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி, UPI மூலம் கட்டணம் எதுவுமின்றி மாதத்திற்கு ரூ.50,000 வரை பெறலாம். அதற்குப் பின்னர் பெறும் பணத்திற்கு, உங்கள் வங்கியானது கட்டணம் விதிக்கலாம் அல்லது கூடுதல் செயல்முறையைச் சேர்க்கலாம்.
கவனத்திற்கு: Google Pay ஆப்ஸை உங்கள் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த, வணிகத்திற்கான Google Pay ஆப்ஸ் பற்றிய உங்கள் ஆர்வத்தைத் தெரிவிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
பணப் பரிமாற்றத்திற்கான வரம்புகள்
பணப் பரிமாற்ற வரம்புகளை NPCI மற்றும் வங்கி அமைக்கும், சில சமயங்களில் Google நிறுவனமும் அமைக்கும். பணப் பரிமாற்ற வரம்புகள், ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.
வரிகளும் கட்டணங்களும்
வணிகரீதியான பணப் பரிமாற்றங்களுக்கு Google Payயைப் பயன்படுத்த தற்போது எந்தக் கட்டணங்களும் இல்லை. விற்பனை வரி, சேவை வரி, VAT வரி அல்லது இதுபோன்ற வரிகளை வசூலிப்பதும் செலுத்துவதும், வணிக உரிமையாளராகிய உங்களின் பொறுப்பாகும். உங்கள் வணிகத்துடன் தொடர்புடைய ஏதேனும் வரிகளைச் சேகரிப்பது அல்லது செலுத்துவது Googleளின் பொறுப்பு அல்ல.