நீங்கள் இவற்றின் மூலம் Google Pay ஆப்ஸில் பணம் பெறலாம்:
- UPI ஐடி
- உங்கள் UPI ஐடியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI எண்
- QR குறியீடு
- பேங்க் அக்கவுண்ட் விவரங்கள்
Google Pay ஆப்ஸில் பணம் பெறுதல்
உங்கள் UPI ஐடி அல்லது UPI எண் மூலம் பணம் பெறுதல்- உங்கள் மொபைல் சாதனத்தில் Google Pay
ஆப்ஸைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
- “பேமெண்ட் முறைகளை அமைத்தல்” என்பதன் கீழே, நீங்கள் பணத்தைப் பெற விரும்பும் பேங்க் அக்கவுண்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் விவரங்களைக் கண்டறிய, UPI ஐடிகளை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
- அனுப்புநருடன் உங்கள் UPI ஐடியைப் பகிரவும்.
Google Pay ஆப்ஸில் உங்கள் தனிப்பட்ட QR குறியீடு மூலம் பணத்தைப் பெறலாம்.
- உங்கள் மொபைல் சாதனத்தில் Google Pay
ஆப்ஸைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
- உங்கள் தனிப்பட்ட QR குறியீட்டைக் கண்டறிய, சுயவிவரப் பட ஐகானை மீண்டும் தட்டவும்.
- அனுப்புநரிடம் QR குறியீட்டைக் காட்டவும். உங்களுக்குப் பணம் அனுப்ப, எந்தவொரு UPI ஆப்ஸ் மூலமாகவும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு அனுப்புநரிடம் கேட்கலாம்.
Google Payயில் உங்கள் பெயர், மொபைல் எண், அக்கவுண்ட் எண் அல்லது UPI ஐடியைத் தேடும்படி பணம் அனுப்புபவரிடம் சொல்லுங்கள். அவர் உங்களுக்குப் பணம் அனுப்பியதும் நீங்கள் ஓர் அறிவிப்பைப் பெறுவீர்கள்.
அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடமிருந்து நீங்கள் பணம் பெறலாம்.
அமெரிக்காவில் உள்ள Google Pay பயனர்களிடமிருந்து பணம் பெறுவதற்குத் தகுதிபெற உங்களிடம் இவை இருக்க வேண்டும்:
- உங்கள் சாதனத்தில் Google Pay ஆப்ஸ் இருக்க வேண்டும்
- இந்திய மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்
அமெரிக்காவில் இருந்து உங்களுக்குப் பணம் அனுப்பவிருக்கும் நபருக்குப் பின்வரும் தகவல்கள் தேவை
- உங்கள் முழுப் பெயர்
- உங்கள் IFSC குறியீடு
- நீங்கள் பயன்படுத்தும் பேங்க் வழங்கிய அக்கவுண்ட் எண்
பணப் பரிமாற்ற விவரங்கள்
உங்கள் பணப் பரிமாற்ற விவரங்களைக் கண்டறிய:
- உங்கள் மொபைல் சாதனத்தில் Google Pay
ஆப்ஸைத் திறக்கவும்.
- “இதுவரையிலான பணப் பரிமாற்றங்களைக் காட்டு” என்பதற்குக் கீழ், நீங்கள் கூடுதல் தகவல்களைப் பெற விரும்பும் பரிமாற்றத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்பு: பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் உங்களுக்குத் தேவையெனில், Google Pay ஆப்ஸின் பணப் பரிமாற்ற விவரங்களில் இருந்து ஸ்கிரீன்ஷாட்டையோ பதிவிறக்கக்கூடிய ரசீதையோ அனுப்புமாறு அனுப்புநரிடம் கேளுங்கள்.
பணம் கேட்டல்
- உங்கள் மொபைல் சாதனத்தில் Google Pay
ஆப்ஸைத் திறக்கவும்.
- நீங்கள் பணம் கேட்க விரும்பும் தொடர்பைக் கண்டறிய, தேடல் பட்டியைப் பயன்படுத்தவும்.
- கீழே உள்ள பணம் கேள் என்பதைத் தட்டவும்.
- தொகையையும் விளக்கத்தையும் உள்ளிடவும்.
- பணம் கேள் என்பதைத் தட்டவும்.
அவர் உங்கள் கோரிக்கையை ஏற்று பணம் அனுப்பினாலோ நிராகரித்தாலோ Google Payயில் இருந்து அதுகுறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள்.