பணம் அனுப்புதல்

இந்தியாவில் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி பணம் அனுப்ப Google Payயை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு இணைய இணைப்பு, இந்திய பேங்க் அக்கவுண்ட் மற்றும் இந்திய மொபைல் எண் தேவை.

மற்றவர்களுக்குப் பணம் அனுப்ப, இதைப் பயன்படுத்தி அவர்களைத் தேடலாம்:

  • பெயர்
  • மொபைல் எண் அல்லது யுனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI - Unified Payment Interface) எண்
  • UPI ஐடி அல்லது VPA (விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி)
  • பேங்க் அக்கவுண்ட் மற்றும் இந்திய நிதி அமைப்புக் குறியீட்டு (IFSC) எண்
  • QR குறியீடு

நேரடியாக QR குறியீட்டை ஸ்கேன் செய்தல் யாருக்,கு வேண்டுமானாலும் பணம் செலுத்துதல், பேங்க் பணப்பரிமாற்றம் செய்தல், மொபைல் ரீசார்ஜ் செய்தல் போன்றவற்றுக்கு முகப்புத் திரையில் உள்ள விரைவுச் செயல்பாடு பட்டியையும் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் எவ்விடத்தில் இருப்பவருக்கும் பணம் அனுப்புதல்

VPA, UPI ஐடி அல்லது மொபைல் எண் மூலம் பணம் அனுப்புதல்

உங்கள் தொடர்பில் உள்ளவர்களிடம் எந்தவொரு UPI ஆப்ஸின் VPA அல்லது UPI ஐடி இருந்தாலும் கீழுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி Google Pay மூலம் பணம் அனுப்பலாம்:

  1. உங்கள் மொபைல் சாதனத்தில் Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேலுள்ள தேடல் பட்டியில், பணம் பெறுபவரின் VPA, UPI ஐடி அல்லது மொபைல் எண்ணைத் தேடவும்.
  3. பெறுநரைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பணம் பெறுபவரை நீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு பணம் அனுப்பு என்பதைத் தட்டவும்.
  5. அவர்களுக்கு அனுப்ப வேண்டிய பணத்தை டைப் செய்யவும்.
  6. தொடர்க என்பதைத் தட்டவும்.
  7. பணம் அனுப்ப உங்கள் UPI பின்னை டைப் செய்யுமாறு கேட்கப்படுவீர்கள்.

உங்கள் UPI பின்னை டைப் செய்தபிறகு உங்கள் பேமெண்ட் செயல்படுத்தப்படலாம்.

QR குறியீடு மூலம் பணம் அனுப்புதல்

QR குறியீட்டை ஸ்கேன் செய்ய:

  1. Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஏதேனும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

பெறுநரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து அவருக்குப் பணம் அனுப்பலாம்.

பெறுநரின் பேங்க் அக்கவுண்ட்டிற்கு நேரடியாகப் பணம் அனுப்புதல்
  1. உங்கள் மொபைல் சாதனத்தில் Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.
  2. பெறுநரின் பேங்க் அக்கவுண்டிற்குப் பணம் அனுப்புவதற்கு பேங்க் பணப்பரிமாற்றம் என்பதைத் தட்டி அதன் விவரங்களை டைப் செய்யவும்.
  3. பெறுநரின் பேங்க் அக்கவுண்ட் எண் மற்றும் IFSC குறியீட்டை டைப் செய்யவும்.
  4. தொடர்க என்பதைத் தட்டவும்.
  5. திரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

முக்கியமான உதவிக்குறிப்புகள்:

  • பணம் அனுப்ப உங்கள் UPI பின்னை மட்டும் நீங்கள் டைப் செய்ய வேண்டும். பணம் பெற அதை டைப் செய்ய வேண்டியதில்லை.
  • பணம் அனுப்பப்பட்ட பிறகு Google Payயில் ஒரு அறிவிப்பைப் பெறுவீர்கள். அனுப்பப்பட்ட பணம் குறித்த தகவலுடன் பேங்க்கிலிருந்து மெசேஜ் ஒன்றையும் பெறுவீர்கள்.
  • பணத்தை அனுப்ப முடியவில்லை எனில் முதலில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து பணத்தை பேங்க் டெபிட் செய்து, அதன்பிறகு அதைத் திருப்பியளிக்கும். இந்தச் சூழலில் பணம் டெபிட் செய்யப்பட்டதற்கும் பணம் திருப்பியளிக்கப்பட்டதற்கும் இரண்டு மெசேஜ்களை நீங்கள் பெறலாம்.
  • பணத்தை அனுப்பும்போது சரியான விவரங்களை டைப் செய்வதை உறுதிசெய்துகொள்ளவும். UPI மூலம் பணம் அனுப்பியவுடன் அதை ரத்துசெய்ய முடியாது.

நீங்கள் ஒருவரைக் கண்டறிய முடியாததற்கான பொதுவான காரணங்கள்

Google Payயில் “மற்றவர்கள் உங்களைக் கண்டறிய அனுமதியுங்கள்” என்ற அமைப்பு தானாக இயக்கப்படுவதில்லை.

இந்த அமைப்பு இயக்கப்படவில்லை எனில், Google Payயில் ஒருவருடன் ஏற்கெனவே நீங்கள் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவரைத் தேட முடியும்.

“மற்றவர்கள் உங்களைக் கண்டறிய அனுமதியுங்கள்” அமைப்பை இயக்க, பெறுநர் இந்தப் படிகளை நிறைவுசெய்ய வேண்டும்:

  1. Google Pay ஆப்ஸை திறக்கவும்.
  2. 'பணம் அனுப்பு' திரையின் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தையோ கணக்கையோ தட்டவும்.
  3. அமைப்புகள் அதன் பிறகு தனியுரிமையும் பாதுகாப்பும் அதன் பிறகு Google Payயில் பிறர் உங்களைக் கண்டறியும் விதம் என்பதைத் தட்டவும்.
  4. உங்களை மற்றவர்கள் கண்டறிய அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் மற்றவர்களைத் தேடலாம்:

  • உங்கள் சாதனத் தொடர்புகளில் உள்ளவரை, அவரின் பெயரைப் பயன்படுத்தித் தேடலாம்.
  • உங்கள் சாதனத் தொடர்புகளில் இல்லாதவரை, அவரின் மின்னஞ்சல் முகவரியையோ மொபைல் எண்ணையோ பயன்படுத்தித் தேடலாம்.

சமீபத்தில் பிற பயனர்களுடன் செய்த பணப் பரிமாற்றங்களில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா?

இந்த பட்டனைக் கிளிக் செய்யுங்கள்

சமீபத்திய பணப் பரிமாற்றங்கள் தொடர்பான உதவி பெறுக

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5080900304230664773
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false
false
false