நீங்கள் புதிய Google Pay ஆப்ஸைப் பயன்படுத்தத் தொடங்கும்போது 'தேடலைப் பயன்படுத்தி மற்றவர்கள் உங்களைக் கண்டறிய அனுமதியுங்கள்' என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள். உங்கள் மொபைல் எண்ணையோ மின்னஞ்சல் முகவரியையோ வைத்திருப்பவர்கள், Google சேவைகள் அனைத்திலும் உங்கள் படத்தையும் பெயரையும் எளிதாகக் கண்டறிய இது உதவும். அத்துடன், Google Pay ஆப்ஸைப் பயன்படுத்தி உங்களுக்குப் பணம் அனுப்ப இது அவர்களை அனுமதிக்கும். இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தால் பணத்தைப் பெற, கூடுதல் படிகளைச் செயல்படுத்த வேண்டும்.
"மற்றவர்கள் உங்களைக் கண்டறிய அனுமதியுங்கள்" என்ற அமைப்பை இயக்குதல்
இந்த அமைப்பு இயக்கப்படவில்லை எனில், Google Payயில் ஒருவருடன் ஏற்கெனவே நீங்கள் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவரைத் தேட முடியும்.
“மற்றவர்கள் உங்களைக் கண்டறிய அனுமதியுங்கள்” என்ற அமைப்பை இயக்க, பெறுநர் இவற்றைச் செய்ய வேண்டும்:
- Google Pay ஆப்ஸை
திறக்கவும்.
- முகப்புத் திரையின்
மேல் வலதுபுறத்தில் உள்ள, உங்கள் சுயவிவரப் படத்தை
தட்டவும்.
- அமைப்புகள்
தனியுரிமையும் பாதுகாப்பும்
Google Payயில் பிறர் உங்களைக் கண்டறியும் விதம் என்பதைத் தட்டவும்.
- மற்றவர்கள் உங்களைக் கண்டறிய அனுமதியுங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் தொடர்புகளில் உள்ள ஒருவரை அவரின் பெயர், மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் மூலம் தேடலாம்.
உதவிக்குறிப்புகள்:
- உங்கள் சாதனத் தொடர்புகளில் உள்ளவரை அவரின் பெயர் மூலம் தேடலாம்.
- உங்கள் சாதனத் தொடர்புகளில் இல்லாதவரை, அவரின் மின்னஞ்சல் முகவரியையோ மொபைல் எண்ணையோ பயன்படுத்தித் தேடலாம்